Tuesday, December 24, 2024
HomeLatest Newsஜஸ்லாந்தில் 24 மணி நேரத்தினுள் 2200 நிலநடுக்கங்கள் பதிவு…..!

ஜஸ்லாந்தில் 24 மணி நேரத்தினுள் 2200 நிலநடுக்கங்கள் பதிவு…..!

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யலிக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந் நிலநடுக்கமானது நாட்டன் தென் பகுதியில் பரவலாக உணரப்பட்டதுடன் தன் தாக்கத்தால் எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படக்கூடும் என எச்சரி்கப்பட்டுள்ளது.

இதில் பல நில நடுக்கங்கள் 4.1 ரிக்டர் அளவில் மிதமானதாக உணரப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஐஸ்லாந்தே எரிமலைகள் செயற்பாட்டிலுள்ள பகுதியாக உள்ளது. மேலும் ஜஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக் தீவு , மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் போன்றவற்றை யுரேசியா மற்றும் வட அமெரி்கா டெக்டோனிக் தகடுகள் பிரிக்கின்றன.

இதற்கு முன்னர் 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் எரிமலை வெடிப்பால் 1000000 விமானங்கள் இரத்துச் செய்யப்படன. இதையடுத்து 2021 மற்றும் 2022 ம் ஆண்டுகளிலும் மேலும் எரிமலை வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் ஜஸ்லாந்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் நி்ச்சயம் அச்சத்தைத் தரக்கூடியவையென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Recent News