Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேல் ஹமாஸ் மோதலில் படுகொலை செய்யப்பட்ட 22 ஊடகவியலாளர்கள்..!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் படுகொலை செய்யப்பட்ட 22 ஊடகவியலாளர்கள்..!

ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஆரம்பமான போரில் இருந்து இதுவரை குறைந்தது 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.


இவர்களில் 18 பாலஸ்தீனியர்கள், மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஒரு லெபனானியர் அடங்குவதாக அந்த குழு ஒரு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்த இறப்புகளில் 15 பேர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களிலும்,
இரண்டு பேர் தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களிலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், மூவரை காணவில்லை அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News