Wednesday, January 22, 2025
HomeLatest News2022 ஆம் ஆண்டில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்!

2022 ஆம் ஆண்டில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்கள்!

2022 ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் (Google) அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிகம் தேடப்பட்ட சொற்கள் 

அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. இதன் இணைய வார்த்தை “விளையாட்டு”. உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக இந்தியா, இங்கிலாந்து (India vs England) என்ற சொல் உள்ளது.

கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால் உக்ரைன் (Ukraine) எனும் சொல் 3 ஆவது இடம்பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத் (Queen Elizabeth), 5 ஆவது இடத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 6 ஆவது இடத்தில் உலகக்கோப்பை (World Cup), 7 ஆவது இடத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies), 8 ஆவது இடத்தில் ஐ போன் 14 (iPhone 14), 9 ஆவது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer), 10 ஆவது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது.

இதனை கூகுள் நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டுள்ளது. 

Recent News