Tuesday, December 24, 2024
HomeLatest News2000 வருடங்கள் பழைமையான வெண்கலச் சிலைகள் கண்டுபிடிப்பு!

2000 வருடங்கள் பழைமையான வெண்கலச் சிலைகள் கண்டுபிடிப்பு!

2,000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட  வெண்கலச் சிலைகள், வெந்நீர் ஊற்று ஒன்றின் சேற்றுக்குள்ளிருந்து தாம் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, டஸ்கனி பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதைந்திருந்த நிலையில், 24 வெண்கலச் சிலைகள் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்துள்ளனர்.

மேற்படி, பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 5000 தங்க, வெள்ளி, வெண்கல நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை காணிக்கையாக செலுத்தப்பட்டவை என நம்பப்படுகிறது.

ரோமர்களால் வெற்றிகொள்ளப்பட்ட  எட்ரஸ்கன் (Etruscans) இன மக்களினால் இச்சிலைகள் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டு வரையான காலத்தில், வெண்கலம் உருவாக்கப்பட்ட காலம் குறித்த புதிய தகவல்களை இக்கண்டுபிடிப்பு வழங்கும் என எட்ருஸ்கன் துறை நிபுணரான நக்கப் டெபோலி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்

Recent News