Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia News2000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து உடனடியாக நீக்கம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு....!

2000 ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து உடனடியாக நீக்கம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு….!

2,000 ரூபாய் நாணயத்தாள்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

அத்துடன் தற்போதுள்ள நாணயத்தாள்களை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யலாம் அல்லது செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

செயற்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 2000 ரூபாய் தாள்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஏனைய வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Recent News