Tuesday, December 24, 2024
HomeLatest Newsவைத்தியசாலை கூரையில் 200 பிணங்கள் – பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

வைத்தியசாலை கூரையில் 200 பிணங்கள் – பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

பாகிஸ்தானின் முல்தான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக் கூரை ஒன்றின் மீது 200 இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஷ்டர் வைத்தியசாலைக் கூரையில் காணப்பட்ட இந்த உடல்கள் அழுகிய நிலையில் இனங்காணப்பட்டுள்ளன என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயத்தில் நேரடியாக ஆராய்ந்த பிரதமரின் ஆலோசகர் Tariq Zaman Gujjar குறிப்பிடும் போது, தான் வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று இந்த மனித உடல்களை அவதானித்து இருந்ததாகவும், இந்த உடல்கள் சரியான முறையில் பதப்படுத்தப்படாமல் சீரற்ற முறையில் அலங்கோலமாக ஆடைகள் இன்றி வீசப்பட்டு இருந்ததாகவும் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்கப்பட்ட போது இந்த உடல்கள் மருத்துவ மாணவர்கள் பரிசோதனைகளுக்காக பயன்படுத்துவது என கூறியுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் உடலை சீரான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் எனும் கட்டுப்பாடுகள் இருக்கும் போது அவை எதுவும் பின்பற்றப்படாமல் இந்த உடல்கள் சீரற்ற முறையில் வீசப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றவியல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு தற்போது சுகாதார அமைச்சுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Recent News