Friday, November 15, 2024
HomeLatest News24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் விடுமுறை..!ஆசிரியருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்..!

24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் விடுமுறை..!ஆசிரியருக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்..!

ஆசிரியர் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 4 ஆண்டுகள் மட்டுமே பாடசாலைக்கு சென்றுள்ளமை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

இச்சம்பவம் இத்தாலி நாட்டில் அரங்கேறியுள்ளது.

தற்பொழுது, 56 வயதாகும் சின்சோ பூலியானா தி லியோ என்ற ஆசிரியரே 24 ஆண்டுகள் தனது பணிக்காலத்தில் 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்துள்ளார்.

இவர், வெனீஸ் நகரிலுள்ள பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

அங்கு, உடல் நலக்குறைவு, கருத்தரங்கு மற்றும் மாநாட்டில் கலந்து கொள்ளுதல் என்று புதுப்புது காரணங்களை கூறி விடுமுறை எடுத்துள்ளதுடன், மகளிருக்கான சிறப்பு உரிமைகளையும் பயன்படுத்தியுள்ளார்.

மிக நீண்ட நாட்களிற்கு சின்சோ பூலியானா விடுப்பு எடுப்பதால் சக ஆசிரியர்களுடன், மாணவர்களும்
இவர் மீது சின்னத்தில் இருந்துள்ளனர்.

அண்மையில் பள்ளிக்கு சென்ற இவர் வாய்மொழியாக தேர்வு நடத்தியுள்ளதுடன், போனில் மெசேஜ் செய்தபடியும் இருந்துள்ளார்.

அது மட்டுமன்றி, தற்போதைய பாடத்திட்டம் என்னவென்று தெரியாமலும் சரியான புத்தகமின்றியும் இருந்தமையால் கொதித்தெழுந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டின் மிக மோசமான ஊழியர் என்ற முத்திரையும் அவர் மீது விழுந்துள்ளது.

இதையடுத்து, சின்சோ பூலியானா நடத்திய பாடங்கள் மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் காணப்படுவதாக பள்ளியின் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்தமையால் கடந்த ஜூன் 22 ஆம் திகதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சின்சோ பூலியானா, தனக்கு எதிரான பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து அவர் பணியில் தொடருவதற்கான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும்,அவர் 24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் பணிக்கு செல்லாமை தெரிய வந்த நிலையில், இந்த மோசமான ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Recent News