Tuesday, December 24, 2024
HomeLatest Newsபாம்பு கடிக்கு மருந்தின்றி இதுவரை 20 பேர் மரணம்!- மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பாம்பு கடிக்கு மருந்தின்றி இதுவரை 20 பேர் மரணம்!- மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில மருந்துகளுக்கு தற்போது பயன்படுத்தப்படும் மாற்று மருந்துகளும் அடுத்த 3 வாரங்களுக்குள் மருத்துவமனை களஞ்சியங்களில் இருந்து படிப்படியாக குறைவடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை களஞ்சியங்களில் இருந்து 20 வீதமே மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அவையும் எதிர்வரும் காலங்களில் நிறைவடையவுள்ளதாகவும் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க சுட்டிக்காட்டினார்.

தற்போது வைத்தியசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு மாத்திரமே மருந்துகள் வழங்கப்படுவதாகவும் வயதான நோயாளிகளை விட இளம் நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News