வீட்டு வேலைகளுக்கு உதவியாக பணி புரியும் பணிப்பெண் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 1.6 மில்லியன் வரை வழங்கப்படும் என கூறப்படும் யாரும் அந்த வேலைக்கு போகாது இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் வசிக்கும் பெண்மணி தனது வீட்டு வேலைகளை செய்வதற்கு உதவியாக பணிப்பெண்ணைத் தேடி வருகின்றார். சம்பளமாக ஒரு மாதத்திற்கு 1.6 மில்லியன் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் 24 மணிநேரமும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பெண்மணி கூறியுள்ளார்.
அது மட்டுமன்றி பணிப்பெண்களாக பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 165 செ.மீ உயரமும், 55 கிலோ எடையும், அழகாகவும் சுத்தமாகவும் இருப்பதுடன் படிப்பில் 12 வது அல்லது அதற்கு மேல் தரவரிசையில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு பாடவும் ஆடவும் தெரிய வேண்டும் எனவும் என்று விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு சம்பளம் பில்லியன் டொலர்களாக இருந்தாலும், பலர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஏனெனில், இந்த வேலையின் மூலம் அவருடைய சுயமரியாதை இழக்கப்படும் என்பதே இந்த வேலையினை பெண்கள் விரும்பாமைக்கான மிகப்பெரிய காரணம் என்று பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஒரு சிலர் குறிப்பிடுகையில் , இந்த வேலையில், முதலாளி முதலில் அவரது காலில் இருந்து செருப்பைக் கழற்றி, கேட்கும் போதெல்லாம் அவருக்கு சாறு, பழம் மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
முதலாளி எதிர்பார்க்கும் நேரத்தில் பணிப்பெண் தயாராக இருக்க வேண்டும் என்பதால் இந்த வேலையில் பெண்களின் நாட்டம் குறைவாக இருக்கும் என கூறியுள்ளனர்.
யார் என்ன கூறினாலும், இந்த வேலையை விளம்பரப்படுத்திய பெண்ணிடம் முன்னதாகவே இரண்டு பெண்கள் 12 மணி நேரம் வேலை செய்து அதே சம்பளத்தினை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.