Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld News17 கொலை.. செவிலியருக்கு 760 ஆண்டுகள் சிறை - அமெரிக்காவை அதிர வைத்த வழக்கு!

17 கொலை.. செவிலியருக்கு 760 ஆண்டுகள் சிறை – அமெரிக்காவை அதிர வைத்த வழக்கு!

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் ஹீதர் பிரஸ்டீ (வயது 41) என்ற செவிலியர் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம், 2 பேரை கொலை செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழக்கை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுவரை இவர் பணியாற்றிய 5 சுகாதார மையங்களில், 17 பேரை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்த போது, அவர் கண்காணிப்பில் இருக்கும் நோயாளிகளிடம் ‘கடவுள்’ போல இருக்க முயன்றதாகவும், அதனால் அவர் நோயாளிகளை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் பணி செய்யும்போது, அங்கிருக்கும் நோயாளிகளுக்கு அதிக அளவு கொடிய இன்சுலின்களை கொடுத்துள்ளார். இதனால் அந்த நோயாளிகள் வரிசையாக இறந்து வந்துள்ளனர்.மேலும் நோயாளிகளிடம் அவர் கடினமாக நடந்துகொண்டார் எனவும், அவர்கள் குறித்து வெளிப்படையாக வெறுப்பாக பேசி வந்ததாகவும் அவருடன் பணியாற்றிய செவிலியர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தன்னுடன் இருப்பவர்களை அவர் வெறுப்பதாகவும், அவர்களை காயப்படுத்தப் போவதாகவும் தனது தாயாருக்கு அவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியுள்ளார்.“அவர் உடல்நலம் சரியில்லாதவர் அல்ல. மனநோயாளியும் அல்ல.. என் தந்தையை கொன்ற அன்று அவரின் முகத்தில் சாத்தானை பார்த்தேன்” என நீதிமன்றத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஒருவர் தெரிவித்தார்.இந்த வழக்கில் அவரே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரின் கொடூர குற்றத்திற்காக 380-760 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Recent News