Saturday, January 11, 2025
HomeLatest Newsஒரே நாளில் பதிவான 1,600 நிலநடுக்கங்கள்..!ஐஸ்லாந்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

ஒரே நாளில் பதிவான 1,600 நிலநடுக்கங்கள்..!ஐஸ்லாந்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

ஒரே நாளில் 1,600 நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நில அதிர்வானது, ஐஸ்லாந்தில் தலைநகரான ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன், இதனால் எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, 1600 நில அதிர்வுகள் அளவிடப்பட்ட நிலையில் அது தலைநகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது மேலும் தொடரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்பட்ட நில அதிர்வில் நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்துள்ளது. இதனால் லேசான நிலநடுக்கம் என கருத்தப்பட்டுள்ள போதிலும் விமானம் பறப்பதற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் இதுவரையிலும் தென்படவில்லை என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் வெடிப்பதற்காக வாய்ப்பு அதிகமாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்டில் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ரெய்க்ஜாவிக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News