ஃபிட் சர்க்யூட்டின் முதல் போட்டியான ரில்டன் கோப்பையில் இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தை சேர்ந்த சிறுவனொருவர் உயர்ந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது 16 ஆவது வயதில் இந்த தகுதியை அடைந்துள்ளமை தற்போது இந்தியாவின் பேசுபொருளாகவுள்ளது.
இந்த சிறுவன் தனது ஐந்தாவது வயதில் இருந்து தனது செஸ் விளையாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் 13 ஆவது வயதில் அவர் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த சிறுவன் செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Congratulations to Pranesh M for winning the Rilton Cup at Stockholm, the first tournament of the FIDE Circuit and also becoming the 79th Grandmaster of the country!! @Bharatchess64 @SnjKpr @FIDE_chess @IndiaSports @Media_SAI @ianuragthakur @PMOIndia pic.twitter.com/kL4MlYBdaI
— All India Chess Federation (@aicfchess) January 6, 2023