Sunday, January 19, 2025
HomeLatest Newsஎரிபொருள் வரிசையில் காத்திருந்த 16 பேர் அவலச் சாவு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த 16 பேர் அவலச் சாவு

பம்பலப்பிட்டி- பயாகல பகுதிகளில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த வயோதிபர்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.

பம்பலப்பிட்டி ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்ற 60 வயதான ஒருவர் திடீரென சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். குறித்த நபர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.

புத்தளம் – மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த குறித்த வயோதிபர், இராஜகிரிய – ஒபேசேகரபுர பகுதியிலுள்ள தமது மகளுடன் வசித்து வந்த நிலையில், நேற்றிரவு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றுள்ளார்.

இவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பயாகல பகுதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 63 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்தபோது திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த இரு மரணங்களுடன் எரிபொருள் வரிசைகளில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News