Sunday, January 19, 2025
HomeLatest Newsக.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் 15 கைதிகள்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் 15 கைதிகள்!

இன்று ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 கைதிகள் தயாராக உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதியும், புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்புக் கைதிகள் நால்வரும், வட்டரெக்க சிறைச்சாலை பாடசாலையில் 10 சிறுவர் குற்றவாளிகள் என 15 கைதிகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரெக்க சிறைச்சாலை பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Recent News