இந்தியா வாழ் 6 வயது சிறுவன் ஒருவனின் நேர அட்டவணை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
அந்த சிறுவன் தான் உருவாக்கிய நேர அட்டவணையில், தனது நாள் முழுவதையும் மணி, நிமிடங்களாகப் பிரித்து எப்போது என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் மற்றும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என அனைத்தும் உள்ளடக்கியுள்ளன்.
அதில் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் விடயம், சிறுவன் படிப்பிற்காக 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளதுடன் சண்டை பிடிப்பதற்காக தினமும் 3 மணிநேரத்தை ஒதுக்கியுள்ளான்.
அத்துடன், தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் மாம்பழம் சாப்பிடவும், சீஸ் சாப்பிடவும் மற்றும் தன் சிவப்பு பொம்மை காருடன் விளையாடவும் என நேரத்தை தனித்தனியாக பிரித்து ஒதுக்கியுள்ளான்.
இந்நிலையில், இந்த சிறுவனின் நேர அட்டவணை சமூக வலைத்ததளங்களில் வேகமாக வைரலாகியுள்ளதுடன் அதிகளவானோர் அதனை பகிர்ந்தும் வருகின்றனர்.