Tuesday, December 24, 2024
HomeLatest Newsயாழில் குழந்தை பெற்ற 14 வயதுச் சிறுமி - 73 வயது தாத்தா கைது

யாழில் குழந்தை பெற்ற 14 வயதுச் சிறுமி – 73 வயது தாத்தா கைது

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கடந்த திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,

அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

Recent News