Monday, January 27, 2025
HomeLatest Newsநாட்டில் புதிதாக 1,320 வைத்தியர்கள் சேவையில்..!

நாட்டில் புதிதாக 1,320 வைத்தியர்கள் சேவையில்..!

நாட்டில் 1,320 வைத்தியர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் புதிய நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த புதிய வைத்தியர்கள் நியமன தினத்திலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்ததுடன் அவ் வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் தமது பணிகளை புரிவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்சமயம் நாட்டில் வைத்தியர்களின் மொத்த எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படும் நிலையில் இனி வருகின்ற புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அந்த எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்கவுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்தமை அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் ஒரே தடவையில் நியமனம் பெறுவதற்கு இயலுமாக இருந்தமை இந்நாட்டின் சுதந்திர சுகாதார சேவைக்குக் கிடைத்த வெற்றி என்று சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது வருடாந்தம் மருத்துவக் கல்லூரிக்கு உள்ளெடுக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1,500 இலிருந்து 1,800 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை 5,000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

இதற்கமைய இவற்றினை இலக்காகக் கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை எதிர்காலத்தில் மென்மேலும் முன்னேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் இணைக்கப்படும் புதிய வைத்தியர்கள், வைத்தியப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள வைத்தியர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Recent News