Tuesday, December 24, 2024
HomeLatest Newsகஞ்சியை உட்கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்..! நேர்ந்த சோகம்..!

கஞ்சியை உட்கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்..! நேர்ந்த சோகம்..!

விஷமாக மாறிய கஞ்சி குடித்தமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் உள்ள காவாங்கோ என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமத்தில் 20 பேர் உள்ளடங்கிய குடும்பத்தினர் வசித்து வந்தன நிலையில் அவர்கள் நேற்றைய தினம் கஞ்சியுடன் வீட்டில் தயாரித்த மதுபானத்தையும் குடித்துள்ளனர்.

இதையடுத்து, சில மணி நேரங்களில் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மயங்கி விழுந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 13 பேர் உயிரிழந்து விட்டதாகவும், நான்கு பேர் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கஞ்சியுடன் குடிக்கப்பட்ட , வீட்டில் தயாரித்த பீர் நொதித்து பல நாட்கள் ஆகியமையால் விஷமாக மாறியிருக்க கூடும் எனவும் அதனை 2 வயது சிறுவர்கள் தொடக்கம் 33 வயது பெரியவர்கள் வரை உட்கொண்டுள்ளதாகவும் நமீபிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Recent News