Sunday, December 29, 2024
HomeLatest Newsசெப்டெம்பருக்கு பின் 12 மணி நேர மின்வெட்டு?

செப்டெம்பருக்கு பின் 12 மணி நேர மின்வெட்டு?

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது நடந்தால் வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேர) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகவும், செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் வரை 25 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை, தற்போது உலக சந்தையில் நிலக்கரியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் இருந்து 900 மெகாவாட் மின்சக்தி தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News