சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 116 பேர் பலியாகியுள்ளனர் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் திங்கள் கிழமை இரவு ஏற்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
நிலத்தடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கான்சு பகுதியில் மட்டும் 105 பேர் பலியாகியுள்ளனர். 397 பேர் காயப்பட்டுள்ளனர். மையத்தைச் சுற்றி நூறு கிலோ மீட்டர்களுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
500-க்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
4000-த்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களும் ராணுவ வீரர்களும் காவல்துறை அதிகாரிகளும் தீவிர மீட்புப் பணியில் உள்ளனர்.