Saturday, January 11, 2025
HomeLatest Newsகினியாவில் 11 போ் பலி - எரிபொருள் நிலையத்தில் தீ.

கினியாவில் 11 போ் பலி – எரிபொருள் நிலையத்தில் தீ.

கினியா நாட்டின் தலைநகரான கொனக்ரியில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையம்இ தீ விபத்தில் வெடித்து சிதறியதில் 11 போ் உயிரிழந்தனா். 80-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க செனகல்இ மாலியில் இருந்து மருத்துவக் குழுவினா் வர உள்ளதாக கினியா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் பஷீா் தியலோ தெரிவித்தாா்.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் நிறைந்த கொனக்ரியில் எரிபொருள் இறக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்யை கினியா பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. இந்த எண்ணெய் கொனக்ரி சேமிப்பு நிலையத்தில் வைத்து விநியோக்கப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள வெடிவிபத்து அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News