Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia News11, 304 கலைஞர்கள் 2, 548 டிரம்மர்கள் - கின்னஸ் சாதனை படைத்த நடனம்..!

11, 304 கலைஞர்கள் 2, 548 டிரம்மர்கள் – கின்னஸ் சாதனை படைத்த நடனம்..!

11,304 கலைஞர்கள் மற்றும் 2,548 துலியாக்களுடன் அரங்கேறிய நாட்டுபுற நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள சுர்சாய் ஸ்டேடியத்தில் அசாமின் நாட்டுப்புற நிகழ்ச்சி, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 11,304 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த பிரமாண்ட நாட்டுப்பு நடனத்தில், 2, 548 துலியாக்கள் (டிரம் வாசிப்பவர்கள்) நடனக் குழுவினருடன் இணைந்து ஒன்றாக டிரம்ஸ் வாசித்து கலக்கியுள்ளனர்.

இதற்கு முதல் உலக சாதனையான 1, 356 டிரம்ஸை, இந்த குழுவினர் பின்தள்ளியுள்ளனர். உலக சாதனையாக பார்க்கப்படும் இந்த நாட்டுப்புற நடனத்தினை கின்னஸ் உலக சாதனை தலைமையகத்தின் லண்டன் பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர்.

11,000 ற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களும், 2,500 ற்கும் மேற்பட்ட டிரம்மர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய பிஹு நிகழ்ச்சியாக அமைவதால், இந்த நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளதாக அந்த அமைப்பின் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

Recent News