தெற்கு செர்பிய நகரமொன்றில், 1999 ஆம் ஆண்டு நேட்டோ குண்டுவீச்சில் வெடிக்காமல் இருந்த 1000 கிலோ நிறையைக்கொண்ட குண்டு ஒன்றை நிபுணர்கள் அகற்றியுள்ளனர்.இதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை அதிகாரிகள் குறித்த இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இந்த 1,000 கிலோ நிறையைக் கொண்ட வெடிகுண்டு கட்டுமான தளத்தில் இருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில் அது அழிக்கப்படும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
செர்பியா மீது நேட்டோ நாடுகள் குண்டுவீச்சு 1999 மார்ச் 24, அன்று குண்டு வீச்சை ஆரம்பித்தன இந்த தாக்குதல்கள் 78 நாட்களுக்கு தொடர்ந்தது.கொசோவோவில் அல்பேனிய இனப் பிரிவினைவாதிகள் மீது செர்பிய தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே குண்டுவீச்சு தாக்குதல்களின் முதன்மை நோக்கமாக இருந்தது.இதன்போது வீசப்பட்ட 1000 கிலோ நிறைக்கொண்ட குண்டே வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.