எம்பிலிப்பிட்டியவில் 10ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சாவை , பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உத்தேசத் திட்டத்தை எம்பிலிப்பிட்டிய மகாசங்கம் மற்றும் பௌத்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், அதனை சமாளிக்கும் நோக்கில் கஞ்சாவை பயிரிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
எம்பிலிப்பிட்டி தற்போது வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசமாகவும், பௌதீக வளங்கள் நிறைந்த பிரதேசமாகவும் திகழ்கின்றது. எனவே அங்கு கஞ்சாவை பயிரிடுவதற்கு அனுமதிக்க முடியாது.
இங்கு கஞ்சா உற்பத்தி செய்து, அப்பகுதிக்கு மீண்டும் அபகீர்த்தியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திற்கு வேறு வழிகள் உள்ளன.
புல்மோட்டை தாது மணல் வளமானது, முறையான சுரண்டல் மற்றும் முறையான மேலாண்மை மூலம் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை கொண்டுவரும்.
எவ்வாறாயினும், நாட்டில் உள்ள இயற்கை வளங்களைத் கட்டியெழுப்புவதன் நன்மைகளை,
தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு விட்டுச் சென்ற அரசாங்கம் இப்போது கஞ்சா சாகுபடியில் தங்கியிருக்க முயற்சிக்கிறது.
கஞ்சாவை உற்பத்தி செய்வதால் பொருளாதார வளர்ச்சி ஒருபோது ஏற்படாது.. மாறாக சமூக மற்றும் ஆன்மீக சீரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.