Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபஸ் தவறி விழுந்ததில் 10 பேர் பலி - பாகிஸ்தானில் ஏற்பட்ட துயரம் !!!

பஸ் தவறி விழுந்ததில் 10 பேர் பலி – பாகிஸ்தானில் ஏற்பட்ட துயரம் !!!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழந்து விழுந்தது, இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள கான்பூரில் இருந்து மலைப்பாங்கான கிராமத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது தர்னாவா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

அதிக வேகம் காரணமாக ஒரு திருப்பத்தின்போது பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு ஹரிபூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் குறித்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Recent News