உலகின் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் மக்களை அனுப்பும் தொலைநோக்கு பார்வை கொண்டுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 2020 ஆம் ஆண்டிலேயே தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஆனால் இந்த சவாலான பணியை எலோன் மஸ்க் எப்படி சாதிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வி.இந்த நிலையில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் பணியின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ் நாசாவிடம் செவ்வாயில் தரையிறங்கும் இடத்தை வழங்குமாறு கோரியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் ஆனது ஸ்டார்ஷிப்பை உருவாக்கி வருகிறது. இது மனிதர்களையும் பொருட்களையும் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட முழுமையாக மறுபயன்பாட்டு வாகனமாகும்.
செவ்வாய் கிரகத்தில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்க ஒரு மில்லியன் டன் சரக்குகள் தேவைப்பட்டால், அதன் செலவு சுமார் 100 பில்லியன் டாலர்கள் என்று மஸ்க் மதிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.