Wednesday, March 5, 2025
HomeLatest Newsபாடசாலை கட்டடம் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 10 பேர் காயம்!

பாடசாலை கட்டடம் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 10 பேர் காயம்!

பாடசாலை கட்டடத்தின் மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்தமையினால் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை இந்துக் கல்லூரில் இன்று காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்கு அருகிலுள்ள காணியில் இருந்த தென்னை மரமொன்று முறிந்து வகுப்பறையின் மீது விழுந்துள்ளது.

இதன்போது தரம் 6 இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வெலிமட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recent News