Thursday, January 23, 2025
HomeLatest Newsதிரெட்ஸின் அறிமுகமாகி 5 நாட்களில் 10 கோடி பேர் இணைவு…..!

திரெட்ஸின் அறிமுகமாகி 5 நாட்களில் 10 கோடி பேர் இணைவு…..!

பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் , வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா ட்விட்டருக்குப் போட்டியாக “திரெட்ஸ்” எனும் செயலியை கடந்த ஜீலை 6 அறிமுகப்படுத்தீய நிலையில் இரு நாட்களில் 7 கோடி பேர் அதில் இணைந்துள்ளனர்.

இதேவேளை தொடர்ந்து 5 நாட்களில் திரெட்ஸில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஏனைய சமூக ஊடகங்களை விட திெரெட்ஸ் முன்னிலை வகிக்கின்றது.

இதைவிட கடந்த காலங்களில் 10 கோடி பயனர்ளைப் பெற சாட்ஜிபிடி சுமார் இரண்டு மாத காலம் சென்றதுடன் ; டிக்டொக் 9 மாத காலம் சென்றது. இதேவேளை கடந்த 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் 10 கோடி பயனர்களைஅடைய இரண்டரை ஆண்டுகள் எடுத்தது.

இந் நிலையில் திரெட்ஸ் 100 நாடுகளில் ஆப்பிள் , கூகுள் பிளே ஸ்ரோரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 5 நாட்களில் 10 கோடி பேர் கணக்கை ஆரம்பித்தமையானது மைல் கல்லாகவுள்ளது.

இதேவேளை 100 கோடி பயனாளர்ளை இன்ஸ்டாகிராம் கொண்டுள்ள நிலையி் அதன் மூலம் திரெட்ஸ் கணக்கை எளிதாக ஆரம்பிக்கும் வசதியுள்ளதால் மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு வழிவகுத்தது.

Recent News