Thursday, December 26, 2024
HomeLatest Newsயாழில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபா தண்டம்

யாழில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணத்தில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கும்,சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவருக்கும் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

குறித்த மூன்று வர்த்தகர்களும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நேற்று நடாத்தப்பட்டது.இதன் போதே பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்கள் சிக்கியுள்ளனர்.

Recent News