Thursday, January 23, 2025
HomeLatest News25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்-ஷாக்கிங்’ ஆக இருக்கிறதா?

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்-ஷாக்கிங்’ ஆக இருக்கிறதா?

ஒரு நாள் 25 மணிநேரங்களாக மாறும் என்கிற தகவலே உங்களுக்கு ‘ஷாக்கிங்’ ஆக இருக்கிறதா?
தற்போது 24 மணி நேரமாக இருக்கும் ஒரு நாள் ஆனது 25 மணிநேரமாக மாறப்போகிறது என்பதே உங்களுக்கு ஷாக்கிங் ஆக இருந்தால்.. அதனை தொடர்ந்து நடக்கப்போகும் அடுத்தடுத்த விளைவுகளை பற்றி சொன்னால் என்ன ஆவீர்கள்?

அப்படி என்ன நடக்க போகிறது? இந்த விளைவுகளை நடக்க காரணம் என்ன?

பூமியும், சந்திரனும் மிகவும் நீண்ட காலமாக ஒன்றுக்கு ஒன்று துணையாக இருந்து வருகின்றன. ஆனால் இந்த ஒற்றுமை, இந்த நெருக்கம் – எப்போதும் இப்படியே இருக்கப்போவதில்லை!
ஏனென்றால், சந்திரன் ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் என்கிற அளவில் பூமியை விட்டு விலகி செல்வதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1969 ஆம் ஆண்டு, நாசாவின் அப்பல்லோ பயணத்தின் (Apollo mission – அமெரிக்காவின் நிலவு பயணத்தின் போது) சந்திரனில் சில பிரதிபலிப்பு பேனல்கள் (Reflective panels) நிறுவப்பட்டன.
அந்த பேனல்களை “கவனித்த போது” தான் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால் – சந்திரன் மெல்ல மெல்ல பூமியை விட்டு விலகி செல்கிறது!

கேட்பதற்கு சாதாரணமாக இருக்கும் இந்த விண்வெளி நிகழ்வின் வாயிலாக, நாம் என்னென்ன விபரீதங்களை சந்திக்க போகிறோம் என்று கூறினால்.. சற்றே திகில் அடைவோம்.

முதலில் சந்திரன் ஏன் பூமியை விட்டு விலகி செல்கிறது? என்பதை பற்றி விளக்கமாக பார்ப்போம். பின்னர் “நிலவின் விலகலால்” நாம் சந்திக்க போதும் 3 மோசமான விளைவுகளை பற்றி பார்ப்போம்.
நிலவு ஏன் பூமி கிரகத்தை விட்டு விலகி செல்கிறது என்பதை பற்றி அறிந்து கொள்வதற்கு முன், நிலவு ஏன் பூமியை சுற்றி வருகிறது என்பதற்கான காரணத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.அப்போது தான் “சந்திரன் ஏன் பூமியை விட்டு விலகி செல்கிறது?” என்பதற்கான காரணத்தை மிகவும் எளிமையாக நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

சந்திரன் பூமியை சுற்றுவதற்கு முக்கிய காரணம் – பூமி கிரகத்தின் ஈர்ப்பு விசை (Gravitational force) தான் நமது கிரகத்தின் வலுவான ஈர்ப்பு விசையால் நிலவு இழுக்கப்படுகிறது. அதன் விளைவாகவே அது பூமியை சுற்றி வருகிறது! அதே நேரத்தில், சந்திரனும் பூமியை இழுக்கிறது.

ஆம்! சந்திரன் தனது சொந்த ஈர்ப்பு புலத்தின் (Gravitational field) விளைவாக பூமியை இழுக்கிறது.சந்திரனின் இந்த இழுப்பால் டைடல் வேவ்ஸ் (Tidal waves) எழுகின்றன. இதன் விளைவாக சந்திரன் ஒரு கிக்-பேக் எபெக்ட்-ஐ சந்திக்கிறது. அதாவது ஒரு வகையான பின்னடைவை சந்திக்கிறது.

அந்த பின்னடைவு தான், சந்திரன் பூமியை விட்டு விலகி செல்வதற்கான ஒரே காரணம் ஆகும்.முன்னரே குறிப்பிட்டபடி, சந்திரன் பூமியை விட்டு விலகி செல்வதன் விளைவாக நாம் மூன்று முக்கியமான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அதில் மிகவும் முக்கியமான மற்றும் உடனடியாக நடக்கப்போகும் விளைவுகளில் ஒன்று நம்மில் பலரையும் திகைக்க வைக்க வைக்கும் படி உள்ளது. மற்ற இரண்டும் ஓரளவு மனதை தேற்றிக்கொள்ளும்படி உள்ளன.

சந்திரன், பூமியை விட்டு விலகுவதால் நாம் சந்திக்க போதும் முதல் மற்றும் உடனடி விளைவு என்ன தெரியுமா? ஒரு நாளின் நீளம் இன்னும் நீண்டதாக இருக்கும்.அதாவது 24 மணிநேரம் என்பது 24 மணிநேரம் 5 நிமிடங்களாக மாறலாம், பின்னர் 25 மணி நேரங்களாக மாறலாம். இப்படி ஒரு நாளின் நீளம் அதிகரித்துக்கொண்டே போகலாம்.தி கான்வெர்ஷேஷன் (The Conversation) வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, 2.45 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 16.9 மணிநேரமாக மட்டுமே இருந்தது.

இப்போது விலகி செல்வது போலவே, கடந்த பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல விலகி சென்றதன் விளைவாகவே – இப்போது ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்கிற கட்டத்தில் நாம் நிற்கிறோம்

பயப்பட வேண்டாம்! ஏனென்றால், இந்த மாற்றம் ஒரே இரவில் அரங்கேறி விடாது.அதாவது 24 மணி நேரம் என்கிற ஒரு நாளின் நீளமானது, சட்டென்று 25 மணி நேரமாக மாறி விடாது. இது நடக்க இன்னும் பல 100 ஆண்டுகள் ஆகும்.

நிலவு , பூமியை விட்டு விலகுவதால் நாம் சந்திக்க போகும் இரண்டாவது விளைவு – கடல்களில் எதிரொலிக்கும்.ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நிலவின் இந்த விலகல் ஆனது கடலின் பெரும்பாலான குளிர் மற்றும் சூடான நீரோட்டங்களை காணாமல் போக செய்யும்.இதன் விளைவாக ஏராளமான நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும்; அதன் தொடர்ச்சியாக – காலப்போக்கில் – கடலோரப் பகுதிகளானது பெரிய அளவிலான மாற்றங்களை சந்திக்கும்.

மற்றும் , சந்திரன் பூமியை விட்டு விலகி செல்வதன் விளைவாக – பூமியின் பருவங்களில் பாதிப்பு ஏற்படும்!இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் – நமது கிரகம் 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதற்கு காரணம் சந்திரன் தான்; அதுதான் குறிப்பிட்ட கோணத்தில் பூமியை ‘லாக்’ செய்துள்ளது.
23.5 டிகிரி என்கிற சீரமைப்பின் காரணமாகவே, பூமி நிலையான பருவங்களை கொண்டுள்ளது மற்றும் பூமியின் துருவப்பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கிறது.

இந்த சீரமைப்பில் சிக்கல் ஏற்படும் போது, அதாவது சந்திரன் பூமியை விலகி செல்லும்போது – பூமி ஒரு தள்ளாடும் கிரகமாக மாறும்.பூமி தள்ளாட்டத்தை சந்திக்கும் அதே நேரத்தில், வெவ்வேறு கிரகங்கள் மற்றும் விண்வெளி பொருட்களால் தொடர்ச்சியாக தள்ளப்படும் மற்றும் இழுக்கப்படும்,
அதன் விளைவாக பூமியின் பருவகாலங்களும், வாழ்க்கை நிலைமைகளும் மாறும்; ஒருகட்டத்தில் நாம் வாழும் இந்த பூமி கிரகம் வாழத்தகுதியற்ற ஒரு கிரகமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

முன்னரே குறிப்பிட்டது போல, நாம் மேற்கண்ட 3 விளைவுகளுமே ஒரே இரவில் நடந்து விடாது; அதே போல – இதெல்லாம் நடக்காமல் கூட போகலாம்.ஏனென்றால் அறிவியலால்ம் இயற்கையை கணிக்க முடியுமே தவிர, முழுமையாக புரிந்து கொள்ளவோ.. கட்டுப்படுத்தவோ முடியாது..

Recent News