Thursday, April 3, 2025
HomeLatest Newsஹமாஸ் தலைவரைப் பிடிக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு.

ஹமாஸ் தலைவரைப் பிடிக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரைப் பிடிக்கப்போவது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காஸாவின் தெற்குப்பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டதாகவும் தற்போது அவர்கள் சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் விரைவில் அவரைப் பிடிக்கப்போவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் செஞ்சிலுவை அமைப்பினரிடம் காஸாவில் இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்து தருமாறும் கோரியுள்ளார்.

Recent News