Sunday, January 26, 2025
HomeLatest Newsவெளிநாடுகளிற்கு செல்லும் தாய்மார்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

வெளிநாடுகளிற்கு செல்லும் தாய்மார்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய தாய்மார்கள் தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அவர்கள் வெளிநாடுகளிற்கு வேலை வாய்ப்பின் நிமித்தம் செல்லக் கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லும் பெண்களுடைய குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த வருடம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதனை மேலும் வினைத்திறனாக்கும் வகையில், மார்ச் 31ஆம் திகதி புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, 45 வயதை பூர்த்தி செய்யாத அனைத்து பெண்களும் பணிக்காக வெளிநாடு செல்லும் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது தொடர்பான அறிக்கையை பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News