Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsரபா நகரம் மீது கைவைத்தால் ஆயுத உதவியை நிறுத்துவோம் : இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

ரபா நகரம் மீது கைவைத்தால் ஆயுத உதவியை நிறுத்துவோம் : இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல் 214வது நாளை எட்டியுள்ள நிலையில், தெற்கு காஸாவிலுள்ள ரபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் போர் தொடுத்தால் இனிமேல் அந்த நாட்டுக்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.எகிப்து மற்றும் கட்டார் நாடுகளின் சமரச பேச்சுக்களைத் தொடர்ந்து இஸ்ரேலுடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் இணங்கியது.

ஆனாலும், இஸ்ரேல் தொடர்ந்து எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காஸாவின் ரபா நகர் மீது தரைவழித் தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காஸா, மத்திய காஸாவில் ஹமாஸ் குழுக்களை கட்டுப்படுத்திவிட்டோம். தெற்கில் ஹமாஸ் குழுவினர் மக்களோடு மக்களாகப் பதுங்கியுள்ளனர்.அவர்களை அழிக்காவிட்டால் போர் முழுமை பெறாது என்று இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ரபா நகருக்குள் முன்னேறினால் இனிமேல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகின்றேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent News