Monday, February 24, 2025
HomeLatest Newsரணிலுக்கு எதிர்ப்பு; நாளை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ரணிலுக்கு எதிர்ப்பு; நாளை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் நாளை காலை 10 மணி முதல் பி.ப 2 மணிவரை தமது பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாளை 19ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதியாக வாய்ப்பு வழங்கக்கூடாது, எரிபொருள், உணவு, போக்குவரத்து வசதிகள், மருந்துகளை வழங்க முடியாத அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்து அவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Recent News