Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsயூடியூப் பார்த்து 6 மாத கர்ப்பத்தை கலைத்த மாணவி மரணம்!

யூடியூப் பார்த்து 6 மாத கர்ப்பத்தை கலைத்த மாணவி மரணம்!

யூடியூடிப்பில் வீடியோ பார்த்து தனது 6 மாத கர்ப்பத்தினை கலைக்க முயன்ற மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயது மாணவி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்கில் 2 ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்துள்ளதுடன், அதனை யாரும் அறிந்து கொள்ளவில்லை.

அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துள்ள நிலையில் ஒரு நாள் வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மாணவியை காணாமையால் , அவரது நண்பர்கள் அழைத்துவர வகுப்பறைக்கு சென்ற போது கதவு தாழிட்டு இருந்துள்ளது. அதிக நேரமாகியும் கதவு திறக்கப்படாமையால் சந்தேகமடைந்து கதவை உடைத்துள்ளனர்.

அங்கு பலத்த ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிய நிலையிலும் மாணவியின் அருகில் 6 மாத சிசுவும் கிடந்துள்ளது.அதையடுத்து மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரும், சிசுவும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றதுடன் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது மாணவி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்தமை தெரிய வந்ததுள்ளது.

அப்போது ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினார்.

குறித்த மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் கார் டிரைவர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததுள்ளதுடன் அவர் மூலம் மாணவி கர்ப்பமாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கபட்டுள்ளது.

பின்னர் பொலிசார் கார் டிரைவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recent News