யுத்தத்திற்கு தயாரான சீனா – முக்கிய நாட்டை வளைக்கத் திட்டம் !

68

தைவான் நீரி­ணை­யில் அமை­தி­யைக் கட்­டிக்­காப்­ப­தற்­கும் தைவான் சுதந்­தி­ர­மாக இருப்­ப­தற்­கும் சம்­பந்­தம் ஏதும் இல்லை என்று சீனா எச்­ச­ரிக்கை விடுத்துள்ளது. தைவா­னைச் சுற்­றித் தான் மேற்­கொண்ட மூன்று நாள் இராணு­வப் பயிற்­சி­கள் நிறை­வ­டைந்­த­ பின்னரே சீனா இவ்­வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் நீரி­ணை­யில் அமை­தி­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் கட்­டிக்­காப்­ப­தற்கு, சுதந்­தி­ரம் பெற தைவான் கடைப்­பி­டிக்­கும் எல்லா வகை­யான பிரி­வி­னை ­வா­தப் போக்­கு­க­ளை­யும் எதிர்க்­க­வேண்­டும் என சீன வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் வாங் வென்­பின் தெரிவித்துள்ளார்.

தைவானை இராணுவ ரீதி­யாக முற்­று­கை­யி­டும் பயிற்­சி­களை சீனா மேற்கொண்டதுடன், அனைத்து பயிற்­சி­களும் வெற்­றி­க­ர­மாக முடிந்ததாகவும், பல்­வேறு பிரி­வு­க­ளின் ஆற்­றல் முழுமை­யா­கச் சோதிக்­கப்­பட்டது என்றும் சீன இராணு­வம் கூறி­யுள்ளது.

தைவான் அதி­பர் சாய் இங்-வென், அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வில் அந்­நாட்­டின் நாடா­ளு­மன்ற நாய­கர்
கெவின் மெக்­கார்த்­தி­யைச் சந்­தித்த பின்னர் தைவான் சுற்­றுப்­பு­றத்­தில் மூன்று நாட்கள் இராணு­வப் பயிற்சி மேற்­கொள்­ளப் போவ­தாக சீனா அறி­வித்­திருந்தது.

முன்னதாக அமெ­ரிக்க நாடாளு­மன்ற நாய­க­ரா­கப் பதவி வகித்த நேன்சி பெலோசி சென்ற ஆண்டு தைவா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டதை தொடர்ந்து தைவான் சுற்­றுப்­பு­றத்­தில் சீனா இராணு­வப் பயிற்­சி­களை மேற்­கொண்­டது.

இம்­முறை சீனா மேற்­கொண்ட பயிற்­சி­க­ளி­லும் அதே அளவு வீரி­யம் இருந்­த­தாக தைவான் வெளி­யுறவு அமைச்­சர் ஜோசஃப் வூ தெரிவித்துள்ளார்.