Friday, January 24, 2025
HomeLatest Newsயாழ். கொவிட் சிகிச்சை நிலைய மோசடி குறித்த உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு

யாழ். கொவிட் சிகிச்சை நிலைய மோசடி குறித்த உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது.

வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த கொரோனா இடைத்தங்கல் முகாம்கள் செயற்பட்டுவந்தன.இந்த நிலையில் பிரதமர் குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

மேலும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News