Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமொஸ்கோவில் தொடர் drone தாக்குதல் அதிரடி காட்டிய உக்ரைன்..!

மொஸ்கோவில் தொடர் drone தாக்குதல் அதிரடி காட்டிய உக்ரைன்..!

தலைநகா் மாஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் மீண்டும் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாஸ்கோவுக்கு வெளியே இரண்டு உக்ரைன் ட்ரோன்களை ரஷிய வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. மேலும் ஓா் ஆளில்லா விமானம் மின்னணு ஆயுதம் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டது.

அந்த விமானம், மாஸ்கோ நகர வா்த்தக மையப் பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் விழுந்து வெடித்தது. இதில், கட்டடத்தின் முகப்புப் பகுதி சேதமடைந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆளில்லா விமானத் தாக்குதலில் சேதமடைந்த அதே கட்டடம்தான், ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மற்றொரு ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்ததாக மாஸ்கோ நகர மேயா் சொ்கேய் சோபியானின் தெரிவித்தாா்.

‘ஐக்யு-க்வாா்ட்டா்’ என்றழைக்கப்படும் அந்தக் கட்டடம், ரஷிய அதிபா் மாளிகையான க்ரெம்ளினுக்கு வெறும் 7.2 கி.மீ. தொலைவில் உள்ளது.எனினும், அதே கட்டத்தில் ஆளில்லா விமானம் இரு முறை விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரஷிய ராணுவத்தின் கூற்றுப்படி, அந்த ஆளில்லா விமானங்கள் கட்டடத்தை தாக்குவதற்கு முன்னரே செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, அந்தக் கட்டடத்தில் இருமுறை சேதம் ஏற்பட்டது தற்செயலாக நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Recent News