Monday, January 27, 2025
HomeLatest Newsமகளை தேடிய தந்தை உயிரிழப்பு- தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் துயர்கள்!

மகளை தேடிய தந்தை உயிரிழப்பு- தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் துயர்கள்!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகளை பல வருடங்களாக தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே தனது மகளை இறுதிவரை காண முடியாத சூழலில் உயிரிழந்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட திருவா கந்தையா என்ற மகளை தேடிவந்த இந்த தந்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களிலும் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறு தமது உறவுகளை தேடி அலையும் பலர் நோய்வாய்ப்பட்டும், வயது மூப்பாலும் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News