Friday, January 24, 2025

பொதுமக்களின் தொலைபேசிகளில் டிக்டொக் செயலிக்கு தடை – முக்கிய நாட்டில் சட்டம்..!

டிக்டொக் செயலியை பொதுமக்கள் தமது சொந்தத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்களில் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடையை அமெரிக்காவின் மொன்டானா மாநிலமே கொண்டு வந்துள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலிக்கு தடை விதித்த அமெரிக்காவின் முதல் மாநிலம் மொன்டானா என்ற சிறப்பினை பெறுகின்றது.

அமெரிக்காவின் மத்திய அரசாங்கம், கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆகியன அரசுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக்கை முன்னதாகவே தடை செய்துள்ளன.

இந்நிலையில், அரசுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் பயன்படுத்துவதை கடந்த டிசெம்பர் மாதம் மொன்டானா தடை செய்திருந்தது.

புதிய சட்டத்தின்படி, மொன்டானாவில் டிக்டொக் செயலியை நிறுவனங்கள் வழங்குவது சட்டவிரோதமாகும் என்பதுடன் ஏற்கெனவே இச் செயலியை தரவிறக்கம் செய்தவர்கள் அதை பயன்படுத்துவதற்குத் தடை இல்லை என கூறப்பட்டுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு மொன்டானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இச்சட்டம் அமுலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதனால், இத் தடைக்கு எதிராக டிக்டொக் நிறுவனம் வழக்குத் தொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest Videos