Wednesday, December 25, 2024
HomeLatest Newsபுத்தரை கண்டு பிடியுங்கள்- பொலிசாரிடம் தஞ்சமடைந்த தமிழரால் பரபரப்பு!

புத்தரை கண்டு பிடியுங்கள்- பொலிசாரிடம் தஞ்சமடைந்த தமிழரால் பரபரப்பு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையினை காணவில்லை என அப் பகுதியில் வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக 09 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில், அந்த புத்தர் சிலை 09 ஆம் திகதி மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவரே வைத்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்றைய தினம் (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை தற்பொழுது அங்கு காணவில்லை எனவும் செட்டிகுளம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டளவில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வந்ததுடன், நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்து கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வசிப்பதற்கு வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த நபர் புத்தர் சிலையை தனது காணிக்கு முன்னாலுள்ள அரச காணியில் வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக செட்டிகுளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recent News