Tuesday, December 24, 2024
HomeLatest Newsபுதையல் தோண்டிய 11 பேர் மடக்கிப்பிடிப்பு 

புதையல் தோண்டிய 11 பேர் மடக்கிப்பிடிப்பு 

உஹன – உதயகிரிய பிரதேசத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உஹன பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் காணப்பட்ட தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல கருவிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் உஹன, இரத்தினபுரி, தலவாக்கலை மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 25 மற்றும் 67 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recent News