Monday, January 27, 2025
HomeLatest Newsபுகையிர விபத்தில் ஒருவர் பலி - மட்டக்களப்பில் சோகம்..!

புகையிர விபத்தில் ஒருவர் பலி – மட்டக்களப்பில் சோகம்..!

மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திலிருந்து நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த இராசநாயகம் ரமேஸ்குமார் என்னும் 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8.15 மணியளவில் கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ள நிலையில் குறித்த நபரின் சடலத்தினை உறவினர்கள் இன்று காலை அடையாளம் காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கு அமைய திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரண விசாரணையை முன்னெடுத்துள்ளார்.

அதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recent News