Friday, November 22, 2024
HomeLatest Newsபிரசவ வேதனையில் துடித்த பெண்-விரைந்துதவிய அதிகாரிகள்..!

பிரசவ வேதனையில் துடித்த பெண்-விரைந்துதவிய அதிகாரிகள்..!

பிரசவத்துக்கு நாள் குறிக்கப்பட்ட இரு வாரங்களுக்கு முன்னரே பனிக்குடம் உடைந்து குழந்தையை பெறுவதற்கு தயாராக இருந்த பெண்ணிற்கு குடிநுழைவு அதிகாரிகள் உதவி புரிந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரசவ வழியில் துடித்த செங் கை லிங், 29 வயதுடைய மலேசியப் பெண்மணிகே விரைந்து ஜோகூர் செல்ல சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் பேருதவி புரிந்துள்ளனர்.

உட்லண்ட்ஸில் தங்கியிருந் செங் கை லிங்கிற்கு பனிக்குடம் உடைந்துள்ளது. அதனை உணர்ந்து தூக்கத்திலிருந்து விழித்த அவர் ஜோகூர் மருத்துவமனையில் குழந்தை பெறவேண்டும் என்று முன்னராகவே வகுத்திருந்த திட்டப்படி தமது கணவருடன் ஜோகூருக்கு செல்ல தயாராகியுள்ளார்.

வலியைத் தாங்கியவாறே உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்குச் சென்ற நிலையில் அவரது கணவர் ஓங் டெக் சான், தமது மனைவியின் அருகே மிகுந்த கவலையுடனும் பதற்றத்துடன் இருந்துள்ளார்.

அதனை கண்ட சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள் நிலைமையை கேட்டறிந்த பின்னர் அவர்களிற்கு உதவ முன்வந்ததுடன், செங்கிற்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கியுள்ளனர்.

வழக்கத்தைவிட மாறாக அதிகளவான பயணிகள் கூட்டம் காணப்பட்ட வேளையிலும் அவர்களுக்கு விரைவாக அனுமதி வழங்கியுள்ளனர். அத்துடன் அங்கிருந்த முதல் உதவிக்குழு அதிகாரிகள் அந்தத் தம்பதியை விரைவாக அழைத்துச் சென்று பேருந்து ஓட்டுநரிடமும் நிலைமையை விளக்கினர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே ஜோகூர் இறங்கிய அந்தப் பெண்ணை அவரது தந்தை இஸ்கந்தர் புத்ரி கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மாலை 4.30 மணிக்கு ஆண் குழந்தை ஒன்றை அந்தப் பெண் பெற்றெடுத்துள்ளார்.

Recent News