Tuesday, December 24, 2024
HomeLatest Newsநேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கம்..!ஐரோப்பிய நாடுகளிற்கு அதிபர் பைடன் சுற்றுப்பயணம்..!

நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கம்..!ஐரோப்பிய நாடுகளிற்கு அதிபர் பைடன் சுற்றுப்பயணம்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அந்த வகையில், நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பைடன் மூன்று ஐரோப்பிய நாடுகளிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அதிபர் பைடன் 9 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இங்கிலாந்து, லித்துவேனியா மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளிற்கு செல்லவுள்ளார்.

முதலாவது பயணமாக லண்டன் செல்லும் அதிபர் ஜோபைடன், அங்கு இளவரசர் சார்லஸ், பிரதமர் ரிஷி சுனக் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, லித்துவேனியாவில் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கவுள்ளார்.

பின்னர், இறுதியாக அவர் பின்லாந்தில் நடைபெறும் அமெரிக்க – நார்டிக் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News