Saturday, March 15, 2025
HomeLatest Newsநெடுந்தீவில் வெட்டு காயங்களிற்கு இலக்கான 100 வயது மூதாட்டியின் உடல் நிலையில் முன்னேற்றம்- வைத்தியர்கள் உறுதி!

நெடுந்தீவில் வெட்டு காயங்களிற்கு இலக்கான 100 வயது மூதாட்டியின் உடல் நிலையில் முன்னேற்றம்- வைத்தியர்கள் உறுதி!

இன்று நெடுந்தீவில் இருந்து வெட்டு காயங்களோடு கொண்டுவரப்பட்ட 100 வயது மூதாட்டியின் உடல் நிலை தேறி வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மூதாட்டியின் முகப்பகுதியில் வெட்டு காயமும் கீழ்த் தாடை என்புடைவும் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

அதேவேளை அவருக்கு மேலதிக பரிசோதனைகளும் சத்திர சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News