Thursday, January 23, 2025

நூற்றுக்கணக்கான தேனீக்கள்- அசால்டாக காரினை ஓட்டிய ஆடவர்!

நூறுக்கும் மேற்பட்ட தேனீக்கள் தனது காரில் இருப்பதை பொருட்படுத்தாது காரினை உரிய வகையில் செலுத்தி சென்ற ஆடவர் ஒருவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சீனாவிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாவ் என்ற ஆடவர் தனது காரில் நூற்றுக் கணக்கான தேனீக்கள் தலைக்கு மேல் சூழ்ந்திருந்ததைப் பொருட்படுத்தாது நிதானமாகக் காரினை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பான காணொளியினை யாவ் ஓட்டிய காரில் அமர்ந்திருந்த வேறொரு நபர் காரின் பின் புறத்திலிருந்து எடுத்துள்ளார்.

தேனீக்கள் ஒரு நாளுக்கு மேலாக காருக்குள் இருந்திருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி யாவ் சொந்தமாகவே பல காணொளிகளை எடுத்து அவற்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் தேனீக்கள் இருக்கும் இடமெல்லாம் அதிர்ஷ்டம் குவியும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை உள்ளமையால், அதில் ஒரு காணொளியில் இதனைப் பாருங்கள் என்றும் நான் செல்வந்தராகப் போகிறேன் என்றும் யாவ் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos