பிரி்க்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாடானது பிரேசில் , ரஷியா , இந்தியா , சீனா மற்றும் தென்னாபிரி்க்கா ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ளது.
2019 ம் ஆண்டு உலகலாளிவிய ரீதியில் ஏற்பட்டகொரோனா பெருந் தாக்கத்தின் பின்னர் நேரடியாக நடைபெறும் முதலாவது மாநாடாகவுள்ளது.
பலே்வறு சர்வதேச.விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்புக்கள் மற்றும் விவாதிப்புக்கள் இடம்பெற இருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரி்காவிற்குச் சென்றுள்ளார்.
தென்னாபிரிக்காவின் வாட்டரக்லூப் விமானப்படைத் தளத்தில்தரையிறங்கிய மோடியைதென்னாபிரிக்கத் துணை அதிபர்பால் மஷாடைல் நேரில் சென்று வரவேற்றார்.
இதேவேளை மாநாடு நடைபெறும் இடத்திற்கு அண்மித்த விடுதியி்ல் தங்கியுள்ள மோடியைச் சந்தி்க தென்னாபிரி்க்காவில் வதியும் இந்தியர்கள் திரண்டனர். அப்போது “வந்தே மாதரம்!” என கோசமிட்டு உற்சாகமளித்தனர். இந் நிலையி்ல் அங்கு வந்த புலம்பெயர் அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை சந்தித்துள்ளார்.