இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகின. இலங்கையில் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேம்படுத்துவது, சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களும் இதில் அடங்கும்.
தலைமன்னார் – இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசினார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் மீனவ பிரச்னை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி
விவாதித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான உறுதிமொழியை இலங்கை நிறைவேற்றும் என நம்புவதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ReplyForward |