Tuesday, December 24, 2024
HomeLatest Newsசஜித்தை பிரதமராக்க தயாராகும் ரணில் - கசிந்த தகவல்..!

சஜித்தை பிரதமராக்க தயாராகும் ரணில் – கசிந்த தகவல்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என ஜனாதிபதி கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபான்மை கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சிறுபான்மை கட்சிகள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனித் தனி நபர்களாகவோ தனிக் கட்சிகளாவோ அன்றி சஜித் தலைமையிலான ஒட்டுமொத்த ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதே பொருத்தமானது என அதிபர் கூறியுள்ளார்.

இது குறித்து ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Recent News